முக்கிய செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாநில தேர்தல் அணையர் 2-வது நாளாக நேரில் ஆஜர்..


உள்ளாட்சி தேர்தலை உயர்நீதிமன்ற உத்தரவுபடி செப்டம்பரில் தேதி அறிவித்து நவம்பரில் தேர்தல் நடத்தாததைத் தொடர்ந்து திமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி மாநில தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். அதன் படி நேற்று மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான்,செயலாளர் ராஜசேகரன் இருவரும் ஆஜராயினர். இன்றும் அவர்கள் நேரில் அஜராகியுள்ளனர்.