காரைக்குடியில் மாநில அளவிலான மாபெரும் சிலம்பாட்ட போட்டி 2022…

தமிழக கூட்டுறவு சங்கங்கள் தேர்தல் ஆணையர் , இந்திய சிலம்ப சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்டக் ழகத் தலைவர் டாக்டர்.மு.இராஜேந்திரன் ஐஏஎஸ் உடன். Dr.T.K.பிரபு, தலைவர், சிவகங்கை மாவட்ட சிலம்பாட்டக் கழகம், J.வினோத்குமார், செயலாளர், சிவகங்கை மாவட்ட சிலம்பாட்டக் கழகம்.

காரைக்குடியில் மாநில அளவிலான மாபெரும் சிலம்பாட்டப் போட்டி 2022 ஏப்ரல் 8,9,10 தேதிகளில் நடைபெறுகிறது.
தமிழ் மண்ணின் பெருமை சொல்லும் உலகின் மூத்தகலை, முதற்கலை, போர்க்கலையின் தாய்க்கலை, தமிழர்களின் வீரக்கலையான சிலம்பக் கலையும் ஒன்றாகும்,
இத்தகைய சிறப்பு கொண்ட சிலம்பக் கலை இடையில் பெரும் தொய்வை சந்தித்தது. உடலும்,மனமும் ஒருங்கிணைத்து நோயற்ற பெருவாழ்வு வாழவைத்த தற்காப்பு கலை இது.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழ்நாடு சிலம்பக் கழகம் மற்றும் சிவகங்கை மாவட்ட சிலம்பக் கழகம் இணைந்து 2002 -ஆம் ஆண்டிற்கான 40-வது மாநில அளவிலான மாபெரும் சிலம்பாட்டப் போட்டி இன்று காலை பி.எல்பி மகாலில் தொடங்கியது. தொடக்க விழாவில் தமிழக கூட்டுறவு சங்கங்கள் தேர்தல் ஆணையர் , இந்திய சிலம்ப சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத் தலைவர் டாக்டர்.மு.இராஜேந்திரன் ஐஏஎஸ் கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் அவர் பேசும் போது சிலம்ப கலையின் பூர்வீகம் தமிழகம் என்றார். சிலம்பக் கலை இந்தியாவில் 24 மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் இருந்து வருவதாக தெரிவித்தார். அதுபோல் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சோழர்கள் படையெடுப்பின் போது சிலம்பக் கலையும் அங்கு சென்றதாக தெரிகிறது என்றார்.


தமிழக அரசு தற்போது விளையாட்டு வீரர்கள் இடஒதுக்கீட்டுப் பிரிவில் சிலம்பம் போட்டியைச் சேர்த்துள்ளது. தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். ஒன்றிய அரசு பாராம்பரிய விளையாட்டு கேலோ போட்டியில் சிலம்பத்தை சேர்த்துள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் சிலம்பத்தை சேர்க்க வலியுறுத்துவோம் என்றார்.
40-வது மாநில சிலம்ப போட்டி இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது இதில் 38-மாவட்டங்களைச் சேர்ந்த சப் ஜூனியர் மற்றும் சீனியர் பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்று உள்ளனர்.


சிலம்பாட்ட வீரர்கள் 350 பேரும் சிலம்பாட்ட வீராங்கனைகள் 290 பேரும் பங்கேற்றுள்ளனர் இந்த போட்டியை தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகமும் சிவகங்கை மாவட்ட சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்துகிறது இந்த மாநிலம் சிலம்பாட்டப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு கல்லூரிகளில் சீருடை பணியாளர்களுக்கு வழங்கப்படும் 10 சதவீதஇட ஒதுக்கீட்டில் சேர்வதற்கும் வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்வதற்கும் இப்போட்டியில் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
முன்னதாக போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சுவையான செட்டிநாடு விருந்து பறிமாறப்பட்டது.
பிற்பகலில் ஆண்,பெண் இருபாலருக்கும் போட்டிகள் தொடங்கின.


செய்தி & படங்கள்
சிங்தேவ்