அம்பேத்கார்,பெரியார்,காமராஜரை படியுங்கள் மாணவர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை.

நடிகர் விஜய் 10 மற்றும்12-ஆம் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை கௌரவிக்கும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்ற நிகழ்வில் நடிகர் விஜய் கலந்து கொண்டு மாணவமாணவிகளை கௌரவப்படுத்தினார்.
அப்போது அவர் பேசுகையில் சமூக வலைத்தளங்களில் நிறைய தவறான செய்திகள் வரும் அதில் எதை எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
மேலும் அவர் பள்ளிப் புத்தகங்களைத்தாண்டி மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். அம்பேத்கார்,பெரியார்,காமராஜர் போன்ற தலைவரை்களைப் பற்றி மாணவ,மாணவிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் நாளைய வாக்களார்கள். பதுிய தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.ஆனால் நம்முடைய விரலை வைத்தே நம் கண்ணை குத்துவது தான் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு மாணவ,மாணவிகளும் தங்கள் பெற்றோரிடம் காசு வாங்கி ஓட்டு போடக்கூடாது என்று சொல்ல வேண்டும். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் நீங்கள் சொன்னால் பெற்றோர்கள் கேட்பார்கள்.எதிர்காலத்தில் நீங்கள் தான் முதல் தலைமுறை வாக்காளர்கள்.இது நடந்தால் ம்ட்மே கல்விமுறை ஒரு முழுமையடைந்ததாக உணர முடியும்.
தேர்வில் தோல்வியடைந்த உங்கள் அருகில் உள்ள மாணவர்களுக்கு நம்பிக்கையளியுங்கள். அதுவே நீங்கள் தரும் பெறும் பரிசு என்று பேசினார்.