முக்கிய செய்திகள்

காமன்வெல்த் மல்யுத்தப் போட்டி: தங்கம் வென்றார் சுசில் குமார்..

Sushil Kumar clinches gold medalat CommonwealthWrestlingChampionships in South Africa


தென்னாப்பிக்காவில் நடைபெற்ற காமன் வெல்த் மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்தியாவைச் சார்ந்த மல்யுத்த வீரர் தங்கம் வென்றார்.

காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகின்றன. நேற்று தொடங்கிய இப்போட்டியில், இந்திய அணி சார்பில் மொத்தம் 60 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று நடைபெற்ற 74 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சுஷில்குமார், தென்னாப்ரிக்க வீரர் ஜொகனஸ் பெட்டுரசை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய சுஷில்குமார், தென்னாப்ரிக்க வீரருக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காமல் 8-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். இது காமன்வெல்த் போட்டிகளில் சுஷில்குமார் வெல்லும் ஐந்தாவது தங்கப்பதக்கமாகும்.

நேற்று நடந்த மல்யுத்த போட்டியில் இந்திய அணி சார்பில் 55 கிலோ பிரிவில் ராஜேந்தர் குமார், 60 கிலோ பிரிவில் மணிஷ், 63 கிலோ பிரிவில் விகாஸ், 67 கிலோ பிரிவில் அனில் குமார், 72 கிலோ பிரிவில் ஆதித்யா குண்டு, 77 கிலோ பிரிவில் குர்பிரீத், 82 கிலொ பிரிவில் ஹர்பிரீத், 87 கிலோ பிரிவில் சுனில், 97 கிலோ பிரிவில் ஹர்தீப், 130 கிலோ பிரிவில் நவீன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.