ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி; 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது. தமிழக வீரர் நடராஜன் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய இந்திய அணி தவான் 53 ரன்கள் விராட் கோலி 40 ரன்கள் அதிரடியாக ஆடிய பாண்டிய 42 ரன்கள் எடுத்தனர். 195 ரன்கள் எடுத்து இந்திய அணி 6விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றியது

கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஹர்திக் பாண்டியா இரண்டு சிக்ஸ் அடித்து 19.4 ஓவரில் இந்திய அணியை வெற்றி இலக்கை எட்டச் செய்தார்.