தோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…

நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு சிறப்பான பல படைப்புகளை வழங்கிய, எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாய்வு நாற்காலி” என்ற நாவலுக்காக 1977ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரானின் மறைவு இலக்கிய உலகத்திற்குப் பேரிழப்பாகும் எனக் கூறியிருக்கிறார்..

இந்த மண்ணில், தமிழ்ப் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்த முஸ்லிம் மக்களின் வாழ்க்கையைத் தன் எழுத்துகள் மூலம் பதிவு செய்து,

மதநல்லிணக்கப் படைப்பாளியாகத் திகழ்ந்தவர் தோப்பில் முகமது மீரான் என்று, மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தில், 1944ஆம் ஆண்டு முகமது தோப்பில் மீரான் பிறந்தார். 74 வயதான அவர், திருநெல்வேலி வீராபாகு நகரில்,

குடும்பத்தினருடன் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக, உடல் நலம் குன்றிய நிலையில், தோப்பில் முகமது மீரான் வெள்ளிக்கிழமை காலமானார்.