முக்கிய செய்திகள்

தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 332 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,278 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 939 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,538 ஆக அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 3 பேர் உயிரிழப்பு; இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 74-ஆக அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.