தமிழகத்தில் இன்று மேலும் புதியதாக 5,684 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 474940 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 6,599 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 4,16,715 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று அரசு மருத்துவமனையில் 44 பேர், தனியார் மருத்துவமனையில் 43 பேர் என 87 பேர் உயிரிழக்க மொத்த உயிரிழப்பு 8,012 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 83,266 மாதிரிகளும், 81,066 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை 54,62,277 மாதிரிகளும், 52,85,823 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.