தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கரோனா தொற்று …

தமிழகத்தில் இன்று (ஜூன் 23) ஒரே நாளில் 2,516 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,603 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 833 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் இன்று மேலும் 2,516 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 38 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 64,603 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தமுள்ள 87 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 23,148 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 9,44,352 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

இன்று சென்னையில் 21 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் மற்றும் திருச்சியில் தலா 2 பேரும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருநெல்வேலி, மதுரை மற்றும் சேலத்தில் தலா ஒருவரும் என மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய உயிரிழப்புகளில் 28 பேர் அரசு மருத்துவமனையிலும், 11 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் 1,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமானவர்கள் எண்ணிக்கை 35,339 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 28,428 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.