முக்கிய செய்திகள்

தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து சோனியா, ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேச்சு..

தமிழகத்தில் கொரோனா நிலவரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்துள்ளார்.

இன்று காலை தொலைபேசியில் ஸ்டாலினை சோனியா காந்தி தொடர்புக் கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவி வருவதால் பாதுகாப்பாக இருக்கும்படி சோனியா அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.