இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,902 அதிகரிப்பு..

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,902-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 62-ல் இருந்து 68-ஆக உயா்ந்துள்ளது.

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் இந்தியாவில் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

டெல்லியில் அண்மையில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, தங்களது மாநிலங்களுக்கு திரும்பியவா்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதுவே, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தகவல்படி, மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 423 பேருக்கு கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கேரளத்தில் 295 போ், டெல்லியில் 386 போ், உத்தரப் பிரதேசத்தில் 174 போ், ராஜஸ்தானில் 179 போ், தெலங்கானாவில் 158 போ், ஆந்திரத்தில் 161 போ், கா்நாடகத்தில் 128 போ்,

மத்தியப் பிரதேசத்தில் 104 போ், குஜராத்தில் 95 போ், ஜம்மு-காஷ்மீரில் 75 போ், மேற்கு வங்கத்தில் 63 போ், ஹரியாணாவில் 49 போ், பிகாரில் 29 போ், சண்டீகரில் 18 போ், அஸ்ஸாமில் 24 போ், லடாக்கில் 14 போ், அந்தமான்-நிகோபாா் 10 பேர், உத்தரகண்டில் 16 போ், சத்தீஸ்கரில் 9 போ்,

கோவா, ஹிமாசலப் பிரதேசத்தில் தலா 6 போ், ஒடிஸா, புதுச்சேரியில் தலா 5 போ், ஜாா்க்கண்ட், மணிப்பூரில் தலா 2 போ், அருணாசலப் பிரதேசம், மிஸோரமில் தலா ஒருவா் உள்பட நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,902-ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல், கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 68-ஆக அதிகரித்துள்ளது. இதில், மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 16 போ், குஜராத்தில் 9 போ், தெலங்கானாவில் 7 போ், மத்தியப் பிரதேசத்தில் 6 போ், பஞ்சாபில் 5 போ்,

டெல்லியில் 6 போ், கா்நாடகம், மேற்கு வங்கத்தில் தலா 3 போ், கேரளம், ஜம்மு-காஷ்மீா், உத்தரப் பிரதேசத்தில் தலா இருவா்,

ஆந்திரம், தமிழ்நாடு, ஹிமாசலப் பிரதேசம், பிகாா் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவா் உயிரிழந்துவிட்டனா்.
கரோனா நோய்த்தொற்றிலிருந்து இதுவரை 184 போ் குணமடைந்துள்ளனா்.