திருவண்ணாமலை கிரிவலத்துக்கு முதன்முறையாக தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

அண்ணாமலையார் திருக்கோவில் ஆறு கால பூஜையும், பௌர்ணமி சிறப்பு பூஜையும் சிறப்பாக நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.

இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். விழா நாட்களிலும் மற்றும் பவுர்ணமி நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.

இந்நிலையில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 11:01 மணிக்கு தொடங்கும் பௌர்ணமி. அடுத்தநாள் காலை 8.05க்கு நிறைவடைகிறது.

இந்த காலகட்டத்தில் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் கிரிவலம் செல்வார்கள்.ஆனால் தற்போது கொரோனாவால், 144 தடை அமலில் உள்ளதால் முதன்முறையாக பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தடை விதித்துள்ளார்.

அதே வேளையில் அண்ணாமலையார் திருக்கோவில் ஆறு கால பூஜையும், பௌர்ணமி சிறப்பு பூஜையும் சிறப்பாக நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.