முதல்வர் தலைமையில் செவ்வாயன்று தமிழக அமைச்சரவை கூட்டம்…

வரும் செவ்வாயன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் (செவாய்க்கிழமை) காலை 10:30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் தாக்கலாக உள்ள மாநில பட்ஜெட், தொழில் வளர்ச்சி குறித்த நடவடிக்கைகள் மற்றும் அச்சறுத்தி வரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகல் பற்றியெல்லாம் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத் அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.