தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு :வானிலை மையம் தகவல்..!

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் பிப்ரவரி 22ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் அதிகாலையில் சில இடங்களில் மழை பெய்த நிலையில் வானிலை மையம் அறிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுயற்சியால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.