தமிழகத்தில் இன்று புதியதாக 5,569 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 569 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 569பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 36 ஆயிரத்து 477 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 556 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 81 ஆயிரத்து 273 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக் னோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 781 ஆக அதிகரித்துள்ளது.