தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு .

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மே 24,25 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம்

தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் விடுத்துள்ள முன்னெச்சரிக்கை:
இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், ஜார்கண்ட், அசாம், மேகாலயா, மேற்கு வங்க கங்கைக் கரையோரப் பகுதி, கேரளா மற்றும் லட்சத்தீவுகளின் ஒரு சில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்) மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடற்கரை மற்றும் தெற்கு உள் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள், யானம், கோவா கொங்கன், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், விதர்பா, சத்தீஸ்கர், பிகார், மேற்கு வங்கத்தில் உள்ள இமாலயப் பகுதி, சிக்கிம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மிசோரம் மற்றும் திரிபுராவின் ஒரு சில இடங்களில் மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.

உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள இமாலயப் பகுதி மற்றும் சிக்கிமின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், மேற்கு உத்தரப் பிரதேசம், அசாம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.