முக்கிய செய்திகள்

திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீப திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்..


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீபத் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, முதல் நாள் நிகழ்வாக, இன்று அதிகாலை, 3 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மன் மற்றும் பஞ்ச உற்சவ மூர்த்திகளுக்கு, சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்னர் தங்க கொடி மரத்தில், கொடியேற்றப்பட்டது. டிசம்பர் 2ம் தேதி கார்த்திகை தீப விழாவின் உச்ச நிகழ்வான தீப திருவிழா கொண்டாடப்படும். விழா தொடங்கியதையடுத்து, அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.