திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மாகா தீபத் திருநாளை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றத்துடன் தீபத்திருவிழா தொடங்கியது.


புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் அமைந்துள்ள 2666 அடி உயரத்தில் கார்த்திகை திருநாள் அன்று வரும் நவம்பர்.19-ஆம் தேதி மகாதீபம் ஏற்றபடவுள்ளது.அன்று காலை பரணி தீபம் ஏற்றப்படும். கொடியேற்றம் நாளை நடைபெறவுள்ளது. சாமிகள் வீதியுலா கரோனா காரணத்தால் மாட வீதிகளில் நடைபெறாது. கோயில் 5-ஆம் பிரகாரத்தில் நடைபெறுகிறது.

இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபதிருவிழா முன்னிட்டு இன்று (10-11-2021) கோயிலின் தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. உபயதாரர்கள்,கட்டளைதாரர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.