முக்கிய செய்திகள்

திருவண்ணாமலையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.

அதன்படி, இந்தாண்டுக்கான திருவூடல் திருவிழாவையொட்டி உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் ராஜகோபுரம் முன்பு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும், ராஜகோபுரம் அருகே உள்ள மகா நந்திக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் பலவகையான இனிப்புகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.