முக்கிய செய்திகள்

மோடியின் “முரட்டுத் தனம் மிக்க புதிய இந்தியா”: ட்விட்டரில் ராகுல் கொந்தளிப்பு

ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் பசு கடத்தல்காரர் என கருதி ரக்பர் கான்(28) என்பவர் மர்ம கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசாரை கண்டதும் தாக்குதல் நடத்திய கும்பல் தப்பியோடியது.

படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ரக்பர் கானை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார், முதலில் பசுவை கோசாலையில் சேர்த்துள்ளனர். நடுவழியில் வாகனத்தை நிறுத்தி டீ சாப்பிட்டுள்ளனர். போலீஸ் ஸ்டேஷன் சென்று உடை மாற்றிக் கொண்டு அதன் பின்னரே ரக்பர் கானை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறி உள்ளனர். 6 கி.மீ., தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு சம்பவம் நடந்து 3 மணி நேரத்திற்கு பிறகு தாமதமாக கொண்டு வந்ததால் அவர் உயிரிழந்து விட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள காங்கி்ரஸ் தலைவர் ராகுல்காந்தி, 6 கி.மீ., தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அல்வார் போலீசார் 3 மணி நேரமாக கொண்டு சென்றதால் பசு பாதுகாவலர்களால் தாக்கப்பட்ட ரக்பர் கான் உயிரிழந்துள்ளார். ஏன்? வழியில் அவர்கள் டீ சாப்பிட வாகனத்தை நிறுத்தி உள்ளனர். இது தான் மோடியின் மோசமான புதிய இந்தியா. மனிததன்மைக்கு பதிலாக வெறுக்கத்தக்க வகையில் மக்கள் நசுக்கப்பட்டு, கொல் ப்படுகின்றனர் என ராகுல் காந்தி தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

This is Modi’s brutal “New India” where humanity is replaced: Rahul