முக்கிய செய்திகள்

கேரளாவில் 3 நாட்கள் முன்னதாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை..


தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியுள்ளது.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கும். கேரளாவில் தொடங்கும் பருவமழை படிப்படியாக, தமிழகம் நோக்கி திரும்பும். ஆனால் நடப்பாண்டில் முன்கூட்டியே தொடங்கியுள்ளது.

தற்போது தென்கிழக்கு ஆப்பிரிக்கக் கடல், கொமோரின் – மாலத் தீவுகள் பகுதி, லட்சத் தீவு, கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது.

இதனால் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும், தென்மேற்கு மத்திய மற்றும் வடகிழக்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.