திரூவாரூர் தொகுதியில் அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ்: டிடிவி தினகரன் அறிவித்தார்

திருவாரூர் தொகுதியில் அமமுக வேட்பாளராக எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற கட்சியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர், அமமுகவின் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜையே வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவித்தார். அத்துடன், திருவாரூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களையும் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

ஆர்கேநகர் இடைத்தேர்தலில் தங்களது கட்சி பெற்ற வெற்றியை தாங்களே முறியடிக்கும் வகையில் திருவாரூர் தேர்தலில் வெற்றி பெறுவோம் என தினகரன் அப்போது தெரிவித்தார்.