முக்கிய செய்திகள்

டிடிவி தினகரன் எதிராக வழக்கு தொடர்வேன் : டிராபிக் ராமசாமி…


டிடிவி தினகரன் வெற்றிக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறியுள்ளார்.

ஆர். கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர்களுள் ஒருவரான டிராபிக் ஏற்றுக்கொள்ள இயலாது. அவருக்கு எதிராக விரைவில் வழக்கு தொடர்வேன் . எனினும் அனைவரையும் எதிர்த்து போட்டியிட்ட அவரின் மன உறுதியை வாழ்த்துகிறேன் . ஆனால் இந்த வெற்றி சரியான முறையில் கிடைத்தது அல்ல என்று அவர் கூறியுள்ளார்.

ஊழலுக்கு எதிராக பல வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்ந்தவர் சமூக ஆர்வலர் டிராப்பிக் ராமசாமி. சில மாதங்களுக்கு முன்பு ஊழல் அமைச்சர்களை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி டிராபிக் ராமசாமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால் சென்னை பாரிமுனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இவர் ஆர். கே.நகர் தேர்தலில் வேட்பாளாரகவும் போட்டியிட்டார்.