இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ட்ரம்ப் வைத்த ஆப்பு!

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 100 சதவீத வரி போட முடிவெடுத்திருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜூம், நிர்மலா சீதாராமனும் முக்கியப் பேச்சுகளை நடத்துவதற்காக அடுத்த வாரம் அமெரிக்கா செல்கின்றனர். இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் இத்தகைய அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா 100 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ளது. இதைத் திரும்பப் பெற வேண்டும். ஐரோப்பிய யூனியன், சீனா, இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்காவின் முக்கியமான வர்த்தகக் கூட்டாளிகள் ஆவர். ஆனால், அவர்களுடனான வர்த்தகச் சூழல் தற்போது சீராக இல்லை. பல நாடுகளும் அமெரிக்க பொருள்களுக்கு கடுமையான வரியை விதித்திருக்கின்றன. அதற்கு பதிலடியாகவே பிற நாட்டு பொருள்களுக்கு 100 சதவீத இறக்குமதி வரி விதிக்க முடிவெடுத்துள்ளோம்.

இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Us Impose To 100% Tariff to foreign goods