உ.பி.யில் இந்து சாதுக்களுக்கு ஓய்வூதியம் : யோகி ஆதித்யநாத்..

உத்தரப்பிரதேசத்தில் இந்து சாதுக்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியம் 400 ரூபாயிலிருந்து 500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளா சமயத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதே திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் என்ற முறையில் 60 வயதுக்கும் மேற்பட்ட இந்து சாதுக்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மாநிலம் முழுவதும் நடக்கும் முகாம்களில் வரும் 30-ஆம் தேதிக்குள் ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்க யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டார்.

தேர்தல் சமயத்தில் இந்து மதத்தவரை மட்டும் சமரசப்படுத்தும் நோக்கில் அறிவித்துள்ளதாக கூறிய அகிலேஷ் யாதவ், ராம லீலையில் ராமர், லட்சுமணன், சீதை, அனுமன், ராவண வேடம் போட்டு நடிப்பவர்களுக்குக்கூட ஓய்வூதியம் அறிவிக்குமாறு கேலி செய்துள்ளார்.