ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது யார் என்று தெரியாது :மத்திய மின்னணு அமைச்சகம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது? எப்படி உருவாக்கப்பட்டது? என்ற கேள்விக்கு மத்திய மின்னணு அமைச்சகம் தங்களிடம் எந்த தகவலும் இல்லை என பதிலளித்துள்ளது.

கரோனா தொற்று பரவுவதை கண்காணிக்க மத்திய அரசால் அறிமுகப்படுத்திய ஆரோக்கிய செயலியை யார் உருவாக்கியது என்று மத்திய மின்னனு அமைச்சகத்திற்கு தெரியவில்லை.

பிரதமர் மோடியால் மக்களுக்கு அறிமுகப்படுத்திய இந்த ஆரோக்கிய செயலி பலரது தகவ்களை சேகரித்துள்ளது. இதன் நன்பகத் தன்மை குறித்து அதிர்ச்சியளிக்கிறது.