முக்கிய செய்திகள்

உலகில் மிக வேகமாக வளரும் நகரங்களில் 30வது இடத்தில் திருப்பூர்: முதலிடத்தில் மலப்புரம்;

உலகிலேயே மிக வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தின் திருப்பூர் 30வது இடத்தைப் பிடித்துள்ளது.

சர்வதேச வார இதழான தி எகானமிஸ்ட் வெளியிட்டிருக்கும் பட்டியலில் மேலும் சில கேரள நகரங்களும் 10வது இடத்துக்குள் வந்துள்ளன.

இந்த பட்டியலில் மலப்புரம் முதல் இடத்திலும், கோழிக்கோடு 4வது இடத்திலும், கொல்லம் 10வது இடத்திலும், திரிசூர் 13வது இடத்திலும் உள்ளன. இவற்றுடன் வியட்நாம், சீனா, ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த நகரங்களும் இடம்பெற்றுள்ளன.

இதில் கேரளாவைத் தவிர சூரத் 27வது இடத்திலும், தமிழகத்தின் திருப்பூர் 30வது இடத்திலும் உள்ளன.

ஐக்கிய நாடுகள் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பிரிவு திரட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையில், நகரங்களில் ஏற்பட்ட மக்கள் தொகை மாற்றம் இந்த பட்டியலுக்கு அடிப்படையாகும்.