முக்கிய செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை: நள்ளிரவு முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரா்ாத்தனை..

தமிழகம் முழுவதும் இயேசுவின் பிறந்தநாளான இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனா்.

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பா் 25ம் நாளில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பண்டிகைகளின் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள தேவாலயங்கள் அனைத்திலும் சிறப்பு கூட்டு பிராா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

வேளாங்கன்னி, தூத்துக்குடி, திருச்சி, சென்னை சாந்தோம் சா்ச், பெசன்ட் நகா் தேவாலயம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் இரவு 12 மணி முதல் சிறப்பு பிரா்ாத்தனை நடைபெற்றது.

இரவு 12 மணிக்கு இயேசு கிறிஸ்து பிறந்ததை நினைவுக்கூா்ந்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதில் இயேசுநாதரின் பிறப்பு தத்ரூபமாக விளக்கி காண்பிக்கப்பட்டது. இந்த சிறப்பு பிராா்த்தனையில் பெரியவா்கள் முதல் குழந்தைகள் வரை புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனா்.