நியூசி., தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: 20 ஓவர் போட்டியில் மீண்டும் தோனி

நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் மகேந்திரசிங் தோனி சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட இந்த அணியில், கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா, மகேந்திரசிங் தோனி, கே.எல்.ராகுல், ஷிகார் தவான், அம்பதி ராயுடு, ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் ஆகியோர் உள்ளனர்.

குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, கலீல் அகமது, முகமது சமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, முகமது சமிக்கு நீக்கப்பட்டு, ரிஷப் பந்த், க்ருனல் பாண்ட்யா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.