முக்கிய செய்திகள்

எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்..


எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு தலைவணங்குகிறேன் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். எடியூரப்பாவாக நானிருந்தால் வழக்கு விசாரணைக்கு வரும் நாளை காலை 10.30 வரை பதவியேற்க மாட்டேன் என்றும் எடியூரப்பாவின் தலைவிதியை ஆளுநரிடம் அவர் அளித்த கடிதம்தான் தீர்மானிக்கும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.