சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு..

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டன.

சிபிஎஸ்இ என அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கியது.

நாடு முழுவதிலும், 16,38,552 மாணவ, மாணவியர் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள்,முதல் தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 4-ம் தேதி நிறைவு பெற்றது.

இந்த நிலையில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டன. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் நாடு முழுவதும் 86.07 மாணவ ர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 88.67% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 85.32% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதிலும் வழக்கம்போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 97.37% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 99.60% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

500க்கு 499 மதிப்பெண்களை 4 மாணவர்கள் பெற்றுள்ளனர். மாணவர்களின் விவரம் ப்ரகர் மிட்டல் (குருகிராம்) ரிம்சிம் அகர்பால்( பிஜ்னோர்), நந்தினி கர்க் (ஷம்லி) ஸ்ரீலஷ்மி (கொச்சின்) ஆகியோர் பெற்றுள்ளனர்.