காரைக்குடியில் 3-வது தென்னிந்திய மற்றும் 6-வது தமிழக பொது மருத்துவர்கள் மாநாடு…

காரைக்குடியில் 3-வது தென்னிந்திய மற்றும் 6-வது தமிழக பொதுமருத்துவர்கள் மாநாடு (3rd SZ & SMZAPICON 2023 & 6th MIDTAPICON 2024) ஜனவரி 6-7 தேதிகளில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் 6- ந்தேதி தொடங்கியது.

மாநாட்டை மருத்துவக் கல்வி இயக்குனரும்- தமிழ்நாடு மருத்துவ சங்கத்தின் தலைவருமான டாக்டர் J.சங்குமணி தலைமைதாங்கி தொடங்கி வைத்தார். சிவகங்கை மருத்துவக் கல்லுாரி முதல்வர் டாக்டர் சத்யபாமா முன்னிலை வகித்தார்.

விழாவில் டாக்கடர் சுரேந்திரன், டாக்டர் ஸ்ரீதர், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விழாவை மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் பழனியப்பன் பொருளாளர் சந்திரசேகர், அப்பலோ நிர்வாக அதிகாரி நீல கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் 200 பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களும், 350 மருத்துவர்களும் தமிழ்நாடு,கர்நாடக,கேரளா ஆந்திரா,தெலுங்கானா புதுவை மாநிலங்களிலிருந்தும். மூத்த மருத்துவர்களும் தேசிய அளவில் பல பொறுப்புகளை வகித்து சிறப்பு பெற்ற மருதுவர்கள் டாக்டர் முருகநாதன், டாக்டர் நரசிங்கள்,டாக்டர் அருள்தாஸ் சிறப்புரை ஆற்றினார்கள்.

செயற்கை நுண்ணறிவு உட்பட நீரழிவு இரத்த அழுத்தம்,இருதய நோய்கள்-தொற்று நோய்கள்,யோகா போன்ற பல்வேறு தலைப்புகளில் 53 சிறப்பு மருத்துவர்கள்விரிவுரை யாற்றினார்கள்

பட்ட மேற்படிப்பு மாணவர்கள் 150 ஆய்வு கட்டுரைகள் வழக்கினார்கள்,வினாடிவினா போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழா ஏற்பாடுகளை செட்டிநாடு பொதுமருத்துவக் கிளையினர் வெகு சிறப்பாக ஏற்பாடுகள் செய்தனர். அதன் தலைவர் டாக்டர் கல்யாணராமசாமி., துணைத் தலைவர் டாக்டர் செல்வராஸ் ஜெயசீலன், அறிவியல் செயற்குழுத் தலைவர் டாக்டர் பூங்குன்றன் இணை செயலர் டாக்டர் செந்தில் குமார், பொருளாளர் டாக்டர் திருப்பதி உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்