ரூ. 4,00,000 கோடியை நெருங்கும் தமிழக அரசின் கடன்…! உங்கள் தலையில் எவ்வளவு கடன் தெரியுமா…?

தமிழக அரசின் கடன் தொகை ரூ. 3,55,845 கோடியாக உயர்ந்துள்ளது.

’தமிழக மக்களின் நலன்’ என்ற ஒற்றை வாக்கியத்தை முன்னிறுத்தி அரசு ஆண்டுதோறும் அடுக்கடுக்காக கடன்களை வாங்கி வருகிறது.

இந்த கடன் தொகையானது பெறப்பட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றதா? இல்லையா? என்பது இதுவரை புரியாத புதிராகவே உள்ளது.

’கடனுக்கு வட்டி, வட்டிக்கு குட்டி’ என தமிழக அரசின் கடன் தொகையானது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதனொரு பகுதியாக, கடைசி நிதியாண்டில் தமிழக அரசின் கடன் தொகையானது ரூ. 3,55,845 கோடியாக உச்சம் தொட்டுள்ளது.

இந்த கடன் தொகையானது அடுத்த நிதியாண்டில் ரூ. 4,00,000 கோடியை எட்டும் அபாயமும் நிலவுகிறது.

தமிழக அரசின் கடன்:
2006 : ரூ. 57,457 கோடி
2011 : ரூ. 1,01,439 கோடி
2015 : ரூ. 2,11,483 கோடி
2017 : ரூ. 3,14,366 கோடி
2017-18 : ரூ. 3,55,845 கோடி
2019-20 : ரூ. 3,97,496 கோடி (கணிப்பு)

இப்போதுள்ள சூழ்நிலையை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு தமிழனின் தலையிலும் ரூ. 30,000 அளவிற்கு கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கடன் தொகை இந்தளவு அதிகரித்துள்ள அதே நேரம் 2018-19 நிதியாண்டில் தமிழகத்திற்கான செலவு ரூ. 1,99,937 கோடியாக உள்ளதாகவும் இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2018-19 நிதியாண்டில் ரூ. 44,066 கோடி கடன் பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.