6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய சொத்துகளை தனியாருக்கு சொத்துக்களை 4 ஆண்டுகளில் விற்க இந்திய அரசு திட்டம்…

தேசிய சொத்துகளை தனியாருக்கு விற்பதன் மூலம் 4 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி திரட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள், மொபைல் டவர்கள், விளையாட்டு அரங்கங்கள், ரயில்வே நிலையங்கள் உட்பட 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு சொத்துக்களை வருகிற 4 ஆண்டுகளில் விற்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், அரசு சொத்து விற்பனை திட்டத்தை விளக்கி அறிவித்துள்ளார்.

செயல்படுத்துதல், பராமரித்தல், ஒப்படைத்தல் என்ற முறையில் அரசு சொத்துக்கள் தனியாருக்கு குத்தகைவிடப்படும். சுங்கம் வசூலிப்பது, செயல்படுத்துவது, திருப்பி ஒப்படைப்பது என்ற திட்டத்தின் கீழ் தனியாருக்கு சொத்துக்கள் தரப்படும். செயல்படுத்துவது, பராமரிப்பது, மேம்படுத்துவது என்ற முறையிலும் அரசு சொத்துக்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.

அரசு சொத்துக்கள் குத்தகைக்கு விடப்பட்டாலும் அவை அரசுக்கு சொந்தமானவையாக இருக்கும். குறிப்பிட்ட குத்தகை காலத்துக்கு பிறகு சொத்துக்கள் அனைத்தும் அரசிடம் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும். தேசிய சொத்துக்களை பணமாக்கும் திட்டம் என்ற பெயரில் சொத்து குத்தகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.