முக்கிய செய்திகள்

அட்சய திரியை : தமிழகத்தில்’ஒரே நாளில் ரூ.10,000 கோடிக்கு விற்பனையான தங்க நகைகள்..


அட்சய திரியை முன்னிட்டு நேற்று ஒருநாளில் மட்டும் தமிழகத்தில் தங்கம் விற்பனை, 20 சதவீதம் அதிகரித்துள்ளது. சுமார் 30 ஆயிரம் கிலோ தங்க ஆபரணங்கள் விற்பனையானது. நேற்று விற்பனையான மொத்த தங்கத்தின் மதிப்பு ரூ. 9,600 கோடி ரூபாயாகும்.
அக்ஷய திருதியை நாளில் தமிழக நகை கடைகளில், ரூ. 10 ஆயிரம் கோடிக்கு தங்க ஆபரணங்கள் விற்பனையாகியுள்ளது.

இந்தியாவில் தங்கம் பயன்பாட்டில், தமிழகம் முன்னணியாக இருக்கிறது. இந்நிலையில் அக்ஷய திருதியை நாளில், தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் பலரும், தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

கடந்த ஆண்டு அக்ஷய திருதியை நாளில், ரூ. 8,000 கோடி தங்க ஆபரணங்கள் விற்பனையானது.

இந்நிலையில் இந்த அண்டும் நகை கடைகள், அதிகாலை திறக்கப்பட்டன. அதிகாலை முதலே கூட்டம் அலைமோதியது. நேற்று ஒருநாளில் மட்டும் தமிழகத்தில் தங்கம் விற்பனை, 20 சதவீதம் அதிகரித்துள்ளது.