முக்கிய செய்திகள்

நடிகர் வடிவேலு பிறந்த நாள் இன்று..

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனியிடம் பிடித்தவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு.இவர் நடித்த காட்சிகள் இல்லாத மீம்ஸ்கள் இல்லையெனலாம்.இவரின் நகைச்சுவை நடிப்பு காட்சிகள் இன்றும் பலரின் மனபாரத்தை குறைக்கும் மருந்தாகவே உள்ளது.

தமிழ் ரசிகர்களாலும், மீம் கிரியேட்டர்களாலும் அதிகம் கொண்டாடப்படுபவர் வடிவேலு. தமிழ்சினிமாவின் `சார்லிசாப்லின்’ `பாவனைகளின் நாயகன்’ என மீம் கிரியேட்டர்களால் அழைக்கப்படும் வடிவேலுவின் பிறந்த நாள் இன்று.

அவரது பிறந்தநாளையொட்டி, சமூகவலைதளங்களில் `ஹாப்பி பர்த்டே எம்சிஸ் தலைவன் வடிவேலு’ என்ற ஹேஷ்டெக் ட்ரண்டாகி வருகிறது.
நடிகர் வடிவேலுக்கு வாழ்த்துகள்.