மாதவரம் அடுக்குமாடி பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை அருகே மாதவரத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் 95 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்து நிலையம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

மாதவரம் அடுக்குமாடி பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் வாயிலாக புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.

மேலும், ரூ.127 கோடி மதிப்பில் 60 குளிர்சாதன, படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள் உட்பட 471 புதிய அரசு பேருந்துகளின் சேவையையும் முதல்வர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேருந்து நிலையத்தில் இருந்து ஒரே சமயத்தில் 100க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்க முடியும். பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர், திருப்பதி, காளஹஸ்தி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொலைதூர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பண்டிகை காலங்களில் ஆந்திரா மற்றும் கர்நாடகாவுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.