அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறி வருகிறது: கோவையில் நலத்திட்ட உதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

கோவையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.662.50 கோடியில் 748 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அப்போதுபேசிய அவர்; 15 மாதங்களில் கோவை மாவட்டத்திற்கு 5வது முறையாக வந்துள்ளேன். கோவை மாவட்டம் மீதும் கோவை மக்கள் மீதும் நான் வைத்துள்ள அன்பில் அடையாளமே வருகைக்கு காரணம். தனக்கென ஒரு இலக்கை அமைத்து அதை செயல்படுத்தி வருபவர் செந்தில் பாலாஜி. கோவை என்றாலே பிரம்மாண்டம் தான். தென்னிந்தியாவின் முக்கியமான தொழில் நகரம் கோவை என கூறினார்.

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. நீண்டகளாகமாக நிறைவேற்றப்படாத 10 கோரிக்கைகள் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் நிறைவேற்றப்படும் எனவும் கூறினார்.
“மற்ற மாநிலங்கள் நம் மாநிலத்தை கூர்ந்து கவனித்து, திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்;
இங்கு இருக்கக்கூடிய சிலரால் இதை தாங்கி கொள்ள முடியவில்லை” அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.