முக்கிய செய்திகள்

தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமனம்


அம்பேத்கர் சட்ட பல்கைலகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம் செய்யப் பட்டு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: அம்பேத்கர்சட்டபல்கலைகழகத்திற்கு துணை வேந்தராக தம்ம சூரிய நாராயண சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் புனே சாவித்தரி பாய் புலே பல்கலை சட்ட பேராசிரியாக பணியாற்றி வருகிறார். அம்பேத்கர் சட்ட பல்கலை துணை வேந்தராக பொறுப்பேற்க உள்ள இவர் அடுத்த 3 ஆண்டுகள் வரை துணை வேந்தராக பதவி வகிப்பார்.