அந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.5 ஆகப் பதிவு..


அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், அந்தமான் தீவுகளில் இன்று மாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவானது.நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.