முக்கிய செய்திகள்

தானியங்கி கார்களை ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் தீவிரம்..

அமெரிக்காவின் மிகப் பெரிய ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து தானியங்கி கார்களை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது.

5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதற்காக தாங்கள் எதுவும் திட்டமிடவில்லை என்று ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தானியங்கி கார் உற்பத்தி பிரிவான குரூஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

தானியங்கி கார் இயக்குவதில் உபேர் மற்றும் லிப்ட் போன்ற நிறுவனங்களுடன் தாங்கள் போட்டியிடுவது மிகப் பெரிய சவால் என்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் தானியங்கி கார்களை இயக்குவதில் உள்ள தொழில்நுட்ப சவால்கள், சிக்கல்களையும் தாங்கள் உணர்ந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.