ஆயுர்வேதா மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை அனுமதி : திரும்பப் பெற வலியுறுத்தி காரைக்குடியில் மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்..

உண்ணாவிரதப் போராட்டத்தில் டாக்டர் ஆர்.வி.எஸ் சுரேந்திரன் (இந்திய மருத்துவ சங்க மேனாள் மாநிலத் தலைவர்) போராட்டத்தை தொடங்கி வைத்தார்., செட்டிநாடு கிளை இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் .தேவக்குமார், செயலாளர் டாக்டர் ஜோதி கணேஷ் , துணைத் தலைவர்கள் டாக்டர் ஜெகதீஷன்,டாக்டர் அருள்தாஸ், டாக்டர் சுவாமிநாத சேதுபதி,பொருளாளர்-டாக்டர் நடேசன் மற்றும் மூத்த மருத்துவர்கள் பிரபல மருத்துவர்கள் கலந்து கொண்ட போது

காரைக்குடியில் நவீன மருத்துவர்கள் (அல்லோபதி)ஆயுர்வேதா மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை அனுமதியை திரும்பப் பெற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்திய மருத்துவ சங்கம் செட்டிநாடு கிளை சார்பில் ஆயுர்வேதா மருத்துவர்களுக்கு ஆயுர்வேத மருத்து இந்திய கவுன்சில் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்கியதை எதிர்த்து காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே செட்டிநாடு மருத்துவ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

ஆயுர்வேதா மருத்துவப்படிப்பு படித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று மத்திய ஆயுர்வேதா கவுன்சில் கடந்த ஆண்டு (2020) நவம்பர் மாதம் 19-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியது.

மத்திய ஆயுர்வேதா கவுன்சிலின் இந்த அறிவிப்பிற்கு நாடு முமுவதும் உள்ள நவீன மருத்துவர்கள் (அல்லோபதி) மற்றும் இன்றி பொதுமக்கள் மத்தியலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது..

ஐந்தரை ஆண்டுகள் படித்து எம்பிபிஎஸ் இளங்கலை பட்டம் பெற்று பின் மூன்று-ஆண்டுகள் பொது அறுவை சிகிச்சை கற்று மேலும் மூன்று ஆண்டுகள் படித்து சிறப்பு அறுவை சிகிச்சை என அல்லோபதி மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சகை்குத் தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள்.

ஏனெனில் அறுவை சிகிச்சை என்பது ஒரு கடினமான படிப்பு மற்றும் பயிற்சியை அடித்தளமாக் கொண்டதாகும்.நான்கு ஆண்டுகள் ஆயுர்வேதா படித்து ஆறு மாதம் அறுவை சிகிச்சை பயிற்சி பெற்ற பின் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற அரசின் முடிவு பொதுமக்களுக்குப் பேராபத்தாக முடியும். உயிருக்கு எமனாகும். எனவேதான் நவீன மருத்துவம் படித்த சுமார் 6-லட்சம் மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஒருங்கிணைந்த இந்திய மருத்துவர் சங்கம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த மருத்துவ சங்கம்நாடு முழுவதும் 2000 கிளைகளைக் கொண்ட ஆசியாவிலேயே பெரிய சங்கமாக செயல்பட்டு வருகிறது.

இந்திய மருத்துவசங்க அகிலஇந்திய தலைமை நாடுமுழுவதும் போராட்ட களம் அமைத்து ஆயுர்வேதா மத்திய கவுன்சிலின் அறிவிப்பாணையை திரும்பபெற வலியுறுத்தி போராடி வருகிறது.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் டெல்லி- உள்பட எல்லா மாநிலத் தலைநகரங்கள்,மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் கிளைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இப்போழுது பிப்ரவரி 1 முதல் 14-ந்தேதி வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் டாக்டர் ஆர்.வி.எஸ் சுரேந்திரன் (இந்திய மருத்துவ சங்க மேனாள் மாநிலத் தலைவர்) போராட்டத்தை தொடங்கி வைத்தார்., செட்டிநாடு கிளை இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் .தேவக்குமார், செயலாளர் டாக்டர் ஜோதி கணேஷ் , துணைத் தலைவர்கள் டாக்டர் ஜெகதீஷன்,டாக்டர் அருள்தாஸ், டாக்டர் சுவாமிநாத சேதுபதி,பொருளாளர்-டாக்டர் நடேசன் மற்றும் மூத்த மருத்துவர்கள் பிரபல மருத்துவர்கள் கலந்து கொண்டு ஆயுர்வேதா மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தினர்.

உண்ணாவிரதப் போராட்டத்தின் போது மருத்துவமனைக்கு வந்த பொதுமக்களுக்கு உண்ணாவிரதப் பந்தலில் சிகிச்சையளித்தனர். குழந்தைகள்.முதியோர் சிகிச்சை பெற்றனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்