முக்கிய செய்திகள்

குழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..


மலையாள நாளிதழில் பிரபல நடிகை குழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தாய்பாலின் முக்கியத்துவத்தை விளக்கவே இப்புகைப்படம் வெளியடப்பட்டதாக நாளிதழ் கூறியது.குழந்தைக்கு பால் ஊட்டும் இந்த புகைப்படத்திற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆபாசம் என்பது பார்ப்பவர் கண்களில் தான் உள்ளது. ஒருவருக்கு ஆபாசமாக தெரிவது, மற்றொருவருக்கு கவிதையாய் தெரியும் கருத்து தெரிவித்தனர்.