பிற்படுத்தப்பட்டோர் 27 சதவீத இடஒதுக்கீடு பெறவில்லை : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

பா.ஜ.க. ஆட்சியில் மத்திய அரசில் உள்ள ஒரு துறையில்கூட பிற்படுத்தப்பட்டோர் 27 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றிடாத நிலையில், முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பது சதித்திட்டம் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் கல்வியாண்டிலேயே மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும்,

தனியார் கல்வி நிறுவனங்களிலும் முற்பட்ட சமுதாயத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும்”

 

என்று ஜெட் வேகத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருப்பதாக கூறியுள்ளார்.

ஆனால் இதே அமைச்சரின் கீழ் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கும் அளிக்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீடும்,

தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள 15 சதவீத இட ஒதுக்கீடும், மலை வாழ் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீடும் சிதைக்கப்பட்டு,

வஞ்சிக்கப்பட்டுள்ளது என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

பா.ஜ.க. ஆட்சியில் மத்திய அரசில் உள்ள ஒரு துறையில் கூட 27 சதவீதத்தை பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் பெற்றிடவில்லை என்பது மிகப்பெரிய கொடுமை என மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியவர்கள் என்றிருந்த இட ஒதுக்கீட்டை “பொருளாதார இட ஒதுக்கீடாக” மாற்றி,

தனது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் பிரதமர் மோடி மிகப்பெரிய சதி வலையை விரித்துள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.