நம்பிக்கை ….: சொக்கலிங்கம் அருணாசலம்

நம்பிக்கை :


எனக்கு ஒரு போன் கால் வந்தது ” சார் உங்க கிட்ட பேசணும் , என் பேரு அழகப்பன் என்றார். சொல்லுங்க என் சொல்லி அவரிடம் கிட்டதட்ட 10 நிமிடம் பேசினேன், தன் மகன் படித்து முடித்து விட்டான் வேலை தேடி அலைகிறான் உதவ முடியுமா என கேட்டார் .
அவர் பேசிய பேச்சில் அக்கறையும் கவலையும் கலந்து இருப்பதை உணர்ந்தேன், அய்யா உங்க மகனை பேச சொல்லுங்க என்று கூறி விட்டு போனை வைத்து விட்டேன். இரண்டு நாள் கழித்து ஒரு போன் “சார் நான் ராஜேஷ் பேசுறேன் அப்பா உங்களிடம் பேசச் சொன்னார்” சொல்லுங்க ராஜேஷ் என கூறி அவர் பேசுவதை பொறுமையாக கேட்டேன், ஒரே விரத்தியாக வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாமல் இருப்பதை ராஜேஷின் வார்த்தைகள் வெளிப் படுத்தியது.
அப்படி என்ன தான் ராஜேஷ் சொன்னார் உங்களுக்கு தெரிய வேண்டுமா ? ரெசுமே (resume) அணுப்ச்சிட்டேன், யாரும் வேலை கொடுக்கவில்லை, ஒரே அப்செட் ஆ இருக்கு? ஏன் தான் இந்த படிப்பை படித்தோனோ… இப்படி ராஜேஷ் பேச பேச எல்லாம் உண்மை தான் அவர் கூறிய காரணங்கள் நியாயமானவைகள் போல தோன்றின.
ஒரு உளவியல் உண்மையை கூற விரும்புகின்றேன். நீங்கள் ஏன் வேலை கிடைக்கவில்லை என காரணங்களை திரும்ப திரும்ப கூறிக் கொண்டே இருப்பீர்களேயானால் அதை உண்மை என உங்கள் மனம் எடுத்துக் கொள்ளும்.
உதாரணமாக “எனக்கு சுட்டு போட்டாலும் கணக்கு வராது”, “எனக்கு ஆங்கிலம் கஷ்டமா இருக்கு” என்னால எல்லாம் அதிக மார்க் எடுக்க முடியாது”, இந்த படிப்புக்கு வேலை இல்லை”, வாழ்க்கையே கஷ்டமா இருக்கு, இப்படி பல காரணங்களை பட்டியலிடலாம்.
நீங்கள் இதையே திரும்ப திரும்ப கூறினீர்கள் என்றால், அது உண்மை போல உங்கள் மனம் ஏற்படுத்தி விடும், அது மட்டுமில்லாமல் என்ன நினைத்தீர்களோ, பேசினீர்களோ அப்படியே இருப்பீர்கள் அல்லது ஆகப் போகிறீர்கள்…
சரி, இப்போது ராஜேசுக்கு என்ன நடந்தது, நான் என்ன பேசினேன் என்பதை பார்ப்போம், நான் முன்பே கூறியது போல அவர் பேசிய காரணங்கள் அவருக்கு வேண்டுமென்றால் உண்மையாக
இருக்கலாம், என்னைப் பொறுத்த மட்டில் நம் முன்னேற்றதை தடுக்கும் தடுப்பு சுவராக நான் பார்க்கிறேன்… வாய்ப்பு இல்லை, வழி இல்லை என்று முடிவு எடுத்து விடீர்களானால் எப்படி
முயற்சி செய்வீர்கள்? அப்படியே செய்தாலும் அது வெறும் கடமைக்காக இருக்கும்.
ராஜேஷிடம் சில கேள்விகளை கேட்டேன். எந்தனை கம்பெனிக்கு முயற்சி சேய்தீர்கள், எத்தனை job போர்டெலில் பதிவிட்டீர்கள், எத்தனை பேரிடம் உதவி கேட்டீர்கள் அல்லது ஷேர் செய்தீர்கள், தமிழ் நாட்டில், இந்தியாவில், உலகத்தில், எத்தனை நிறுவனங்கள் இருக்கின்றன, நீங்கள் ஏன் மற்றவருக்கு வாய்ப்பை உருவாக்கும் தொழிலை தொடங்க அல்லது கற்றுக் கொள்ள அனுபவத்தை பெற ஏதாவது செய்யக் கூடாது இப்படி பல கேள்விகளை கேட்டேன்.
நம் தமிழ் நாட்டில் மட்டும் உங்கள் படிப்பு சார்ந்த ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன. அது மட்டுமில்லாமல் இணைய சேவை வந்ததற்கு பிறகு உலகமே கைக்குள் வந்து விட்டது, லச்சக் கணக்கான வாய்ப்புகள் உலகம் முழுவதும் உள்ளன.
வெறும் ஒரு சில நிறுவனத்திற்கு முயற்சி செய்து விட்டு வேலையே கிடைக்கவில்லை என நினைக்கும் மன பாவத்தை என்னவென்று சொல்வது. முயற்சி எல்லோரிடமும் இருக்கிறது, ஆனால் இந்த கால கட்டத்தில் முடியும் வரை முயற்சிப்பேன், கனவு கண்டேன் நடக்கவில்லை என்று கூறாமல் இதையே நனவாகும் வரை காண்பேன் போன்ற சிறந்த மனோபாவம் தேவைப் படுகிறது.
நிறைய மனிதர்கள் வெற்றி நம்மை தேடி வரவேண்டும் என நினைக்கிறார்கள், அப்படி வராத பச்சத்தில் வாழ்க்கையை குறை கூற ஆரம்பித்து விடுகிறார்கள், இதையே வெற்றியாளர்கள் வாய்ப்பை தேடி செல்கிறார்கள் அல்லது உருவாக்குகிறார்கள். இந்த உலகம் உள்ள வரை புதுப் புது வாய்புக்கள் வரத் தான் போகிறது, இவ்வளவு பிரமாண்டமான உலகில் நாம் வாழ வாய்ப்பு இல்லாமலா போய் விடும்… வெற்றி அடைந்த அனைவருமே பல சவால்களை கடந்து சாதனையாளர்களாக இன்று இருக்கிறார்களென்றால், எல்லா சூழலும் சாதகமாக இருந்ததில்லை, நம்பிக்கையும் விடாமுயற்சியுடன் சோதனையை சாதனையை மாற்றி இருக்கிறார்கள்.
இந்த காலத்தில் அதிகம் நம்பிக்கை ஆளுமைகள் தேவை படுகிறார்கள்.. உங்களுக்கு ஒரு ஆளுமையை கூர விரும்புகின்றேன்..
நம் எல்லோருக்கும் தெரியும் வர்தா புயலின் பாதிப்பு, ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆசை ஆசையாய் பார்த்த, வளர்த்த மரங்கள் மரணித்தது இன்று நினைத்தாலும் மனம் மிக வேதனைப் படுகின்றது, கண்ணீரை வர வைக்கிறது.
இதையே வேறு ஒரு கோணத்தில் பார்க்கலாமா! கோடிக்கணக்கான மரங்கள், மனிதர்களை போல காரணங்கள் கூற முடியாது, வெயில் அதிகமாக இருக்கிறது, மழை புயல் என்றால் வீட்டில் அடைந்து கொள்கிறோம், ஏதாவது ஆபத்து என்றால் தப்பிக்க, இடம் விட்டு இடம் மாற முடியும். உதவி கோர முடியும்.
ஆனால் இருந்த இடத்தை விட்டு செல்லாமல், அவ்வளவு பேய் காற்றையும் புயலையும் தாங்கி என்னை என்ன செய்ய முடியும் என்று தலை நிமிர்ந்து நிற்கும் ஒவ்வொரு மரமுமே தன்னம்பிக்கைக்கு உதாரணம் தான்.
மரங்கள் தண்ணீர் இல்லையே என் கண்ணீர் விட்டு அழுவதில்லை, தற்கொலைக்கு முயற்சிப்பதில்லை, யாரிடமும் புலம்புவதுமில்லை, விரக்தி அடைந்து முயற்சியை கைவிட்டு கவலை கொள்வதுமில்லை…
மரங்கள் நீரை தேடி செல்கின்றன, இலையுதிர் காலத்தில் தன் மொத்த இலைகளை உதித்தாலும் நம்பிக்கையை மட்டும் உதிப்பதில்லை, எல்லா சூழலையும் எதிர்கொள்கின்றன… காலம் மாறும் என நம்பிக்கையோடு இருக்கின்றன, வெட்ட வெட்ட துளிர்கின்றன… மரமே ஓ மரமே! புத்தருக்கு ஞானம் தந்த மரமே…
ஒவ்வொரு மரத்தை கடந்து செல்லும் பொழுதும் எப்படி மொபைல் சார்ஜ் செய்கிறோமோ அது போல நம்மை நம்பிக்கையான எண்ணங்களால் சார்ஜ் செய்யலாமே.!
காரணம் சொல்லுபவர்கள் காரியம் செய்வதில்லை, காரியம் செய்பவர்கள் காரணம் சொல்வதிலை வரிகளை போல காரணம் கூறாமல் செய்வதற்கான ஒரு சில காரணங்களை கண்டு பிடியுங்கள் .
என்னால் முடியும், எதையும் சாதிக்க என்னால் முடியும், வளமான வாழ்கையை உருவாக்குவேன் எப்படி நீரைத் தேடி வேர் செல்கிறதோ, அதை போல காரணம் சொல்லாமல் வாய்ப்பை தேடி செல்வேன். அடைவேன்.. வெற்றி அடைவேன் என உறுதி கொள்ளுங்கள்… நிச்சயம் வாழ்க்கை வசந்தமாகும்..!!

நன்றி
சொக்கலிங்கம் அருணாசலம்