முக்கிய செய்திகள்

மக்கள் எழுச்சியால் காவிரி உரிமையை மீட்போம் : நாகையில் மு.க.ஸ்டாலின் பேச்சு


நாகை மாவட்டம் செம்பியன்மாகாதேவியில் காவிரி மீட்பு பயணத்தில் ஸ்டாலின் பேசினார். கடலூரில் இருந்து புறப்பட்டு சென்னையை நோக்கி பேரணியாக செல்ல உள்ளோம் என்று கூறினார். சென்னை சென்று ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்க திட்டம் என்று மு.க.ஸ்டாலின் பேசினார். காவிரி மீட்பு பயணத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பங்கேற்றுள்ளனர் என்று ஸ்டாலின் கூறினார். கருணாநிதியின் மகன் என்ற உரிமையில் கம்பீரத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுளேன் என்று பேசினார்.

தமிழர் நலனுக்காக பயணம்

ஒத்துமொத்த தமிழர்களின் நலனுக்காக விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காக பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவிரி உரிமையை மீட்டே தீருவோம் என்ற உறுதியோடு பயணம் தொடர்கிறது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

கடும் வெயிலிலும் தொடரும் பயணம்

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காவிரி உரிமைக்கான பயணம் தொடர்கிறது.