செய்யூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. அரசு கரோனா தொற்றால் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட் பதிவில்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கழகத்தின் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசு அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்.

மக்கள் பணியில் அவருக்குள்ள அக்கறையும், தன்னம்பிக்கையும், தொடர்ந்து மேற்கொண்டு வரும் சிகிச்சையும் அவரை மீண்டும் வழக்கம்போல பணியாற்றச் செய்திடும்!