முக்கிய செய்திகள்

சிகாகோவில் 10-வது உலகத் தமிழ் மாநாடு..

10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு ஜூலை 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அறிவித்துள்ளது.

10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR) துணையோடும், அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA), சிகாகோ தமிழ்ச் சங்கம் (CTS) ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்போடும் நடைபெற உள்ளது.

அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம் 1964ஆம் ஆண்டு புதுடில்லியில் தனிநாயக அடிகளின் முயற்சியால் நிறுவப்பட்டது.

பிரான்சை சேர்ந்த பீலீயோசா, செக்கசுலோவிக்கியா சுலபில், ஆசர், இங்கிலாந்து பரோ, எமனோ, தமிழகத்தைச் சேர்ந்த தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், வி.ஐ.சுப்ரமணியன் ஆகியோர் இணைந்து இந்த ஆய்வு மன்றத்தைத் தொடங்கினர்.
இது ஒரு அரசியல் சார்பற்ற, ஊதியம் கருதாத ஆய்வு மன்றம். “பொதுவாகத் திராவிடம் பற்றியும் குறிப்பாகத் தமிழ் பற்றியும் செய்யப்படும் ஆய்வுகளைப் பல்வேறு துறைகளில் அறிவியல் முறையில் செய்ய ஊக்குவித்தலும், இவற்றோடு தொடர்புடைய பிறதுறைகளில் ஆய்வுகள் செய்துவரும் அறிஞர்களோடும் உலக நிறுவனங்களோடும் நெருங்கிப் பங்குகொள்ளுதலும் ஆகும்.” இதன் நோக்கம்.

கோலாலம்பூரில், 1966ஆம் ஆண்டு முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடும், சென்னையில், 1968-ஆம் ஆண்டு இரண்டாம் மாநாடும், தொடர்ந்து பின் வந்த மாநாடுகள் பாரிசு நகர் (1970), யாழ்ப்பாணம் (1974), மதுரை (1981), கோலாலம்பூர் (1987, 2015), போர்ட் லூயிசு (1989), தஞ்சாவூர் (1995) ஆகிய நகரங்களில் நடைபெற்றன.
முன்னாள் அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத் துணைத் தலைவர் வி.சி.குழந்தைசாமியின் உந்துதலாலும் ஊக்கத்தினாலும் அமெரிக்கா தமிழ்ச்சங்க பேரவையும், சிகாகோத் தமிழ்ச்சங்கமும் அடுத்த மாநாட்டை புதுமுறையில் நடத்த முன்வந்தனர்.

2015-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த 9-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொண்ட தமிழ்ப் புலவர் பிரான்சிசு ச. முத்து, அடுத்த மாநாட்டை, முன்னாள் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தலைவர் சோமா இளங்கோவன் நடத்த வேண்டும் என்றும் அதற்கு அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் ஒப்புதலும் ஊக்கமும் அளித்தல் வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றமும், அதன் தலைவர் மாரிமுத்தும், துணைத் தலைவர் பொன்னவைக்கோவும் ஏற்றுக்கொண்டனர். இப்போது 2019ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற உள்ள 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

முன்னாள் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தலைவர் சோமா இளங்கோவன், மாநாட்டின் ஒருங்கிணைப்புக் குழுவின் (Organizing Committee) தலைவராக இருக்கிறார்.

இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினர்களாக அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் சுந்தர் குப்புசாமி, சிகாகோ தமிழ்ச் சங்கத் தலைவர் மணி குணசேகரன் பொறுப்பேற்றுள்ளனர். புலவர் பிரான்சிசு ச. முத்து ஆய்வுக்கு குழுவின் (Academic Committee) தலைவராகவும், தமிழ் ஆய்வாளர் பி மருதநாயகம் ஆய்வுக்குழுவின் இணைத் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டின் மைய ஆய்வு பொருளாக, “தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மையை, புது வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்.” அமைந்துள்ளது

ஆராய்ச்சித் தலைப்புகளை பற்றியும், “ஆராய்ச்சிக் கட்டுரை சுருக்கத்தையும்” (ABSTRACT), “ஆராய்ச்சி விரிவுக் கட்டுரையையும்” (RESEARCH PAPER) அனுப்பும் முறைகளையும் அனுப்பவேண்டிய தேதிகளையும் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள பின் வரும் இணையதள முகவரியைப் பார்க்கவும்:
www.iatrnew.org or

Home


email iatr2019@fetna.org.
https://fetna.org/wp-content/uploads/2018/09/%E