காங்கிரஸ் உடன் கூட்டணி ? : சந்திரபாபு நாயுடு விளக்கம்..

தனது கோரிக்கையை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் நிராகரித்தால் தான் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ பாஜகவை வீழ்த்த , பெரிய அளவிலான கூட்டணி அமைப்பது கட்டாயம். ஜனநாயக கட்டாயத்தின் காரணமாக காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளோம்.

கர்நாடகாவில் காங்கிரஸால் பாஜக ஆட்சி தடுக்கப்பட்டது. தமிழகத்தில் பாஜக., காங்கிரஸ் கட்சிகளுக்கு இடமே இல்லை. தென்னிந்தியாவில் இரு தெலுங்கு மாநிலங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என சந்திரசேகர ராவிடம் தெரிவித்தேன்.

அவர் யோசித்து சொல்வதாக தெரிவித்தார். ஒரு வார அவர் முடிவுக்காக காத்திருந்தேன். அதன் பின் தான் இந்த முடிவை நான் அறிவித்தேன்.

சந்திரசேகர ராவ் பாஜக,வின் பிடியில் உள்ளதால், கூட்டணி வைக்க மறுக்கிறார். எங்களின் மெகா கூட்டணி பாஜக, வின் கூட்டணியை வீழ்த்தும்.’என்றார்.