படித்து முடித்த 75000 மாணவர்களுக்கு பட்டம் தராமல் இழுத்தடிக்கும் அழகப்பா பல்கலைக்கழகம்: யார் காரணம் ?..

அழகப்பா பல்கலைக்கழகம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள புகழ் பெற்ற அழகப்பா பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தாமல் படித்து முடித்து பட்டம் பெறவுள்ள மாணவர்களை தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது.


அழகப்பா பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. பட்டமளிப்பு விழாவில் தான் மாணவர்கள் தங்கள் முனைவர் பட்டத்துக்கான சான்றிதழ் வாங்க முடியும் என்ற நிலை உள்ளது.

கரோனாவைக் காரணம் காட்டி நிறுத்த பட்ட பட்டமளிப்பு விழா இன்று வரை நடைபெறவில்லை. இதனால் ஏறத்தாழ படிப்பு முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் பட்டம் வாங்காமல் 1200 க்கும் அதிகமான முனைவர் படிப்பு படித்த மாணவர்கள் தவிக்கிறார்கள். முனைவர் படிப்பு முழுமை பெற்றத்துக்கான ஆதாரமாக விளங்கும் அந்த சான்றிதழ் இல்லாமல் சரியான வேலைவாய்ப்பு கிடைக்காத சூழல் உள்ளது. உச்சபட்ச படிப்பு படித்தும் அதற்கான ஊதியம் கிடைக்காத சூழல் உள்ளது.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் பயின்ற முதுகலை மாணவர்கள். அழகப்பா பல்கலைக்கழக உறுப்பு கல்லுாரிகளில் பயின்ற இளங்கலை மாணவர்கள் என வருடத்திற்கு 15000 மாணவர்கள் பட்டம் பெறத் தகுதி பெறுகின்றனர். இதுபோல் அழகப்பா தொலைதுாரக் கல்வியில் பயின்ற மாணவர்கள் சுமார் 10000 பேர் தகுதி பெறுகின்றனர் ஆக வருடத்திற்கு 25000 மாணவர்கள் அழகப்பா பல்கலைக்கழகத்தின் வழியே பட்டம் பெறுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தாதால் சுமார் 75000 மாணவர்கள் பட்டம் பெற காத்துகிடக்கின்றனர்.இவர்களில் முனைவர் பட்டம் முடித்தவர்களின் நிலை மோசமானதாகவுள்ளது.

நேரடி வேலைவாய்ப்பின் மூலம் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநாடு நிறுவனங்களில் பணி பெற்று அங்கு சென்று நல்ல சம்பளத்தில் பணியில் அமர்ந்த பின்னர் பட்டம் இல்லாத காரணத்தால் இந்தியாவுக்கு திரும்பி அனுப்பட்டுள்ள சோகக் கதைகளும் உண்டு.

படித்து முடித்தும் பட்டம் தராமல் இழுத்தடிப்பதற்கு யார்காரணம் பல்கலைக்கழக நிர்வாகமா.. ?, பல்கலைக்கழக வேந்தராகவுள்ள ஆளுநரா..? அல்லது தமிழக அரசா ?
பல்கலைக்கழக வேந்தராகவுள்ள தமிழகஆளுநர் அழகப்பா பல்கலைக்கழகத்தை புறக்கணிக்கிறார். பட்டமளிப்பு விழாவுக்கு நேரம் தர மறுக்கிறார். தந்தாலும் வராமல் ஏமாற்றுகிறார். இதற்கு பின்னால் அரசியல் காரணம் இருப்பதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

கரோனாவுக்கு பின் தமிழகத்தின் அனைத்து பல்கலைக்கழகமும் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் அழகப்பா பல்கலைக்கழகம் திரும்பவில்லை. தமிழகத்தின் அனைத்து பல்கலை கழகத்திலும் பட்டமளிப்பு விழா நடத்த பட்ட சூழலில் அழகப்பா பல்கலையில் நடத்தப்படவில்லை. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் மாணவர் நல அமைப்புகள் தலையிட்டு தீர்வு காண பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோரிக்கைவைத்து வருகின்றனர்.

தங்கள் சுய லாபத்திற்காக மாணவர்களின் வாழ்வை சீரழிக்க வேண்டாம், ஆளுநர்,அழகப்பா பல்கலைக்கழக நிர்வாகம்,தமிழக அரசும் உடனடியாக பட்டமளிப்பு விழா நடத்தி மாணவர்களின் எதிர்காலத்தை காக்கா வழிவகை செய்ய வேண்டும்.
அழகப்பா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை உடனே நடத்த ஆளுநரை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியைச் சேர்ற்த 4 பெண்கள் உள்பட 52 பேர் இன்று அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தின் முன் ஆர்பாட்டம் நடத்த முற்பட்டனர். தடையை மீறி அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய முற்பட்டதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்